25.5 C
Kuala Lumpur
Thursday, September 17, 2026

Vetri

டமான்சாரா தாமாய் ஓம் ஸ்ரீ கைலாயநாதர் ஆலய கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது!

🔥 Views : 2,852
👁 Reading Now : 39

புனித அருள்மிகு நித்யகல்யாணி உடனுறை ஓம் ஸ்ரீ கைலாயநாதர் ஆலயத்தின் இளம் கோவில் நன்னீராட்டு விழா (கும்பாபிஷேகம்) வெகு சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். விழாவையொட்டி கைலாயநாதருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் கும்பாபிஷேக நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர்.

விழாவின் நிறைவாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அன்னதானமும் நடைபெற்றது.

ஆலயத் தலைவர் தர்மேந்திர கோபால், துணைத் தலைவர் தீபன்ராஜ் தர்மராஜா, செயலாளர் வேலவனலகபன், பொருளாளர் கதிரேசன் சுப்பிரமணியம் ஆகியோர் விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles