27.9 C
Kuala Lumpur
Wednesday, July 22, 2026

Vetri

சுவா தொகுதியில் தீவிர பிரச்சாரம்; மக்களின் கருத்துகளே எங்கள் வழிகாட்டி – டாக்டர் குணராஜ்!

🔥 Views : 3,828
👁 Reading Now : 49

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, சுவா (Chuah) சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பூன் லாய்-க்கு ஆதரவாக, மாநில சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜார்ஜ் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

சுவா தொகுதியில் உள்ள லாட் குடியிருப்புப் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது, பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடிய டாக்டர் குணராஜ், மக்களின் கருத்துகள், பரிந்துரைகள் மற்றும் கோரிக்கைகளை நேரடியாகக் கேட்டறிந்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மக்களின் ஒவ்வொரு குரலும் மிகவும் முக்கியமானது. அவர்களின் கருத்துகளும் தேவைகளும், சிறந்த தீர்வுகளை உருவாக்குவதற்கான வழிகாட்டியாக அமைகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தங்களுக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்புக்கு பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த அவர், “நெகிரி செம்பிலானின் முன்னேற்றத்திற்கும், மக்களின் நலனுக்கும் அனைவரும் ஒன்றிணைந்து சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவோம்” என அழைப்பு விடுத்தார்.

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பல்வேறு கூட்டணிக் கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தொகுதிகளில் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles