30.6 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

சிலாங்கூருக்கு 615,000 தடுப்பூசிகள் மட்டுமே!

🔥 Views : 9
👁 Reading Now : 24

சிலாங்கூர மாநிலத்துக்கு இதுவரை 615,000 தடுப்பூசிகள் மட்டுமே கிடைத்துள்ளது என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத்துறை அமைச்சின் தரவுகள் காட்டுவது போல் 29 லட்சம் தடுப்பூசிகள் அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

இம்மாதம் முதல் தேதி வரையிலான காலக்கட்டத்தில் சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை 434,070 பைசர் பயோஎன்டெக் தடுப்பூசிகளையும் 146,440 சைனோவேக் தடுப்பூசிகளையும் 34,700 அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசிகளையும் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஆகவே, சிலாங்கூர் மாநிலம் 29 லட்சம் தடுப்பூசிகளைப் பெற்றதாக கூறப்படுவதற்கு அறவே சாத்தியம் கிடையாது. கூடுதலாக 25 லட்சம் தடுப்பூசிகளை சிலாங்கூர் பத்திரப்படுத்தி வைப்பதற்கான வாய்ப்பும் இல்லை என்று அறிக்கை ஒன்றில் அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles