30.6 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

நோய்த் தொற்றை ஒழிக்கும் போராட்டத்தில் எதிர்க்கட்சிகளையும் இணைத்துக் கொள்ளலாம்!

🔥 Views : 7
👁 Reading Now : 24

நாட்டில் கோவிட் 19 நோய்தொற்று ஒழிக்கும் போராட்டத்தில் எதிர்க்கட்சிகளையும் இணைந்து கொள்ளலாம் என்று கோத்தா ராஜா செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜோர்ஜ் குணராஜ் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ள தற்போதைய சூழலில் கோவிட்-19 நோய்த் தொற்றுப் பிரச்னையைக் களையும் விவகாரத்தில் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் யாசின் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் நேரடியாக விவாதிப்பதன் மூலம் இப்பிரச்னைக்கு ஆக்ககரமான முறையில் தீர்வு காண்பதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்று அவர் சொன்னார்.

நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதை தெளிவாக காண முடிகிறது. ஆகவே ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் இணைந்து செயல்படுவதன் மூலம் இவ்விவகாரம் மீது பயன்மிக்க பரிந்துரைகளையும் கருத்துக்களையும் முன்வைப்பதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்றார் அவர்.

கோவிட்-19 நோய்த் தொற்று பிரச்னைனை நாட்டு மக்களின் உடல் நலனையும் பாதுகாப்பையும் உள்ளடக்கிய விவகாரமாக உள்ளதால் இப்பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் அரசியல் பேதங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம் என்று அவர் தெரிவித்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles