30.6 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

போலீஸ் லாக்கப்பில் என்ன நடந்தது ?
டாக்டர் இராமசாமி கேள்வி!

🔥 Views : 11
👁 Reading Now : 67

தடுப்புக் காவல் கைதி பரூக் அப்துல்லா என்ற ஹேமநாதன் தடுத்து வைக்கப்பட்டபோது லாக்காப்பில் என்ன நடந்தது என்று போலீசார் வெளிப்படுத்த வேண்டும் என பினாங்கு மாநில துணை முதல்வர் டாக்டர் பி. ராமசாமி கேட்டுக்கொண்டார்
தடுப்புக்காவலில் தொடரும் மரணச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் .
ஆனால். இந்த 45 நாட்களில் நான்கு காவல் கைதிகள் மரணமடைந்துள்ளனர்.
காவல் கைதிகள் மரணம் தொடர்பில் போலீசார் கூறும் காரணங்கள் சரியாக இல்லை.
காவல் கைதி ஹேமநாதன் மாடியில் இருந்து கீழே குதித்து இறந்துவிட்டார் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் கூறுவது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது என்றார் அவர்.
ஒருநாள் லோக்காப்பில் இருந்தபோது அவர் தாக்கப்பட்டாரா என்பதை போலீசார் உறுதிபடுத்த வேண்டும்.
மேலும், இந்த மரண சம்பவம் தொடர்பில் விசாரணை அதிகாரி ஒருவர் பணி மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காவல் கைதி மரணம் தொடர்பில் விசாரணை முடிவடையும் வரை அந்த போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் டாக்டர் ராமசாமி வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles