31.9 C
Kuala Lumpur
Sunday, August 9, 2026

Vetri

செபெராங் பிறை மாநகர் மன்றம் நடவடிக்கை எடுக்குமா ?

🔥 Views : 29
👁 Reading Now : 53

தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான செம்பனைத் தோட்ட நிலம் சுத்தம் செய்யப்படாமல் அடர்ந்த காடுகளாக இருப்பதால்,அங்கிருந்து பல்வேறு விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் நுழைந்து அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக பத்து காவான் தாமான் தம்புன் இமாஸில் வசிக்கும் பிரபு முனியாண்டி தெரிவித்தார்.
இது தொடர்பில் கடந்தாண்டு பலமுறை செபேராங் பிறை மாநகர் மன்றத்திடம்,தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு புக்கர் செய்தும் இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார்.
வீட்டில் பாம்பு,பூரான்,உடும்பு போன்றவை நுழைவதால் குடும்பத்திலுள்ளவர்களை அனைவரும் பயத்துடன் இருப்பதாக சொன்னார்.
எனது பிரச்சனைக்கு செபராங் பிறை மாநகர் மன்றம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles