26.8 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

பூக்கடைக்காரர்களின் வேதனையை அரசாங்கம் உணர வேண்டும் !

நாடு தழுவிய நிலையில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு நடமாட்ட
கட்டுப்பாட்டு ஆணையின் நடவடிக்கையில் கடுமையாக
பாதிக்கப்பட்டிருக்கும் பூக்கடைக்காரர்களின் வேதனையை அரசாங்கம்
மனசாட்சியோடு உணர்ந்து பார்க்க வேண்டுமென பினாங்கு பத்து உபான்
தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆ.குமரேசன் குரல் எழுப்பியுள்ளார்.
அன்றாட உணவுக்ககு தினந்தோறும் வருமானம் ஈட்டும் இவர்களின் வாழ்க்கை
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
தினமும் வழிபாடுகளுக்கு பூ இன்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்த விவகாரத்தில் பூக்கடைக்காரர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமெனவும் ஆ.குமரேசன் குறிப்பிட்டார்.
கேமரன் மலையில் இருந்து கொண்டுவரப்படும் பூக்கள் அனைத்தும் தற்போது குப்பைகளில் கொட்டப்படுகின்றன.
பூ கடைகளைத் திறக்க அனுமதி இல்லாததால் பூக்கடை வியாபாரிகளும் பூ மொத்த வியாபாரிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles