25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை: விஸ்மா புத்ரா

🔥 Views : 5
👁 Reading Now : 53

🔊To listen to this news in Tamil, Please select the text.

சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை.

வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா இதனை கூறியது.

சிரியாவின் ஹமா நகரின் கிழக்கில் 4.8 ரிக்டர் அளவில்  நிலநடுக்கம் தாக்கியது.

இதன் அதிர்வுகள் சிரியா, லெபனானை பாதித்தது. மேலும் ஜோர்டான், துருக்கி வரை அது உணரப்பட்டது.

உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 11.56 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து லெபனானின் பெய்ரூட்டில் உள்ள மலேசிய தூதரகம், சிரியாவில் உள்ள மலேசிய தூதரகம் மூலம் நிலைமையை அமைச்சு உன்னிப்பாக கவனித்து வருகிறது.

அதே வேளையில் தற்போது, ​​இந்த நிலநடுக்கத்தால் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று விஸ்மா புத்ரா தெரிவித்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles