
🔊To listen to this news in Tamil, Please select the text.
மலேசியா நாட்டுக்கு 2 லட்சம் டன் பாசுமதி அல்லாத சாதாரண வகை அரிசியை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவுக்கு வருகைத் தந்த மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் பிரதமர் நரேந்திர மோடியிடம் வைத்த கோரிக்கையை ஏற்று இந்தியா இதற்கு சம்மதித்துள்ளது.
உள்நாட்டு அரிசி விலையைக் கட்டுக்குள் வைக்க வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு 2023ம் ஆண்டு முதல் இந்தியா தடை விதித்துள்ளது.
எனினும், நட்பு நாடுகளின் கோரிக்கையை ஏற்று இந்தியா அரிசி ஏற்றுமதிக்கு அனுமதி அளித்து வருகிறது.
இதற்கு முன்பு நேபாளம், கேமரூன், கினியா, பிலிப்பின்ஸ், ஷெசல்ஸ், மலாவி, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கும் பாசுமதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி அளித்துள்ளது.
தற்போது மலேசியாவுக்கு 2 லட்சம் டன் அரிசி ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



