26.4 C
Kuala Lumpur
Monday, June 29, 2026

Vetri

ஜொகூர் ஜசெகவிற்கு முதல் பெண்மணி தியோ தலைமையேற்கிறார்!

🔥 Views : 12
👁 Reading Now : 33

பெட்டாலிங் ஜெயா அக் 8
ஜொகூர் மாநில ஜசெகவின் புதிய தலைவராக கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங் தேர்வு செய்யப்பட்டார்.
ஜொகூர் மாநில ஜசெகவிற்கு தலையேற்கும் முதல் பெண்மணி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெற்ற ஜொகூர் ஜசெக பேராளர்கள் கூட்டத்தில் அதிக வாக்குகள் பெற்ற 15 வேட்பாளர்களில் தொடர்பு துறை துணையமைச்சர் தியோவும் ஒருவராவார்.
மாநில ஜசெகவின் துணைத் தலைவராக குளுவாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் ஷூ கி தேர்வு செய்யப்பட்டார்.
இதனிடையே மாநில ஜசெக நிர்வாக குழுவிற்கு நியமனம் செய்யப்பட்ட 20 பேரில் 45 விழுக்காட்டினர் பெண்கள் என தியோ அறிக்கை ஒன்றில் கூறினார்.
அனைத்து மாநிலங்களின் நிர்வாக குழுவில் அதிகமான பெண்கள் ஜொகூர் நிர்வாக குழுவில் தான் இடம்பெற்றுள்ளனர் என்றார் அவர்.
ஜொகூர் ஜசெக தலைவராக ஒரு பெண்மணி நியமனம் செய்யப்பட்டுள்ளது தமக்கு கிடைத்த ஒரு கௌரவம் என அவர் சுட்டிக் காட்டினார்.
இன்றைய தேர்தலில் தியோ 692 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles