27.8 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

போதைப்பொருளை கடத்தியதாக மூன்று நண்பர்கள் மீது குற்றச்சாட்டு

🔊To listen to this news in Tamil, Please select the text.

இம்மாதம் முற்பகுதியில் ஜோகூர், மூவார், கம்போங் தெமியாங் புக்கிட் திரே என்ற இடத்தில் 11 கிலோ எடை கொண்ட கெனபிஸ் வகையைச் சேர்ந்த போதைப்பொருளை கடத்தியதாக ஒரு மியன்மார் பிரஜை உட்பட மூன்று நண்பர்கள் மூவார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

40 வயது முகமட் ஃபைஸ் ஹுஸ்னி, 37 வயது ரிட்டுவான் சுல்ஹில்மி மற்றும் ஒரு மியன்மார் பிரஜையான 32 வயது ஷாவ் ஆங் ஆகியோரே குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று நபர்கள் ஆவர்.

இந்த மூவரும் கடந்த நவம்பர் 16 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் மூவார், கம்போங் தெமியாங் புக்கிட் திரே என்ற இடத்தில் பெரியளவில் போதைப்பொருள் கடத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்க வசைசெய்யும் 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் மூவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles