33.5 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

குவைத்தின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிப்பு!

🔥 Views : 8
👁 Reading Now : 67

குவைத் நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர் ‘ பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

மேற்கு ஆசிய நாடான குவைத்துக்கு மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று அங்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு இந்தியர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். நேற்று குவைத் சிட்டியில் நடந்த ‘ஹாலா மோடி’ என்ற குவைத் வாழ் இந்தியர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பேசினார்.
குவைத் அரண்மணையில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. மன்னர் ஷேக் மெஷால் அல் அஹமது அல் ஜாபர் அல் ஷாபாவை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பிரதமர் விவாதித்தார்.இந்நிலையில், குவைத் நாட்டின் உயரிய விருதான ‘ ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர்’ விருது வழங்கி அந்நாடு கவுரவித்தது.
நட்பின் அடிப்படையில் ஒரு நாட்டின் தலைவர்கள், அரச குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இதற்கு முன்னர், இந்த விருதானது அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் மற்றும் பிரிட்டன் மன்னர் சார்லஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டு இருந்தது.

பிரதமர் மோடி இதுவரை பெற்ற உயரிய விருதுகள்

  1. 2016 ல் சவுதி அரேபியாவின் ‘ ஆர்டர் ஆப் அப்துல் அஜீஸ் அல் சவுத்’ விருது
  2. 2016 ல் ஆப்கனின் ‘ஸ்டேட் ஆர்டர் ஆப் காஜி அமீர் அமானுல்லா கான்’ விருது
  3. 2018 ல் பாலஸ்தீனத்தின் ‘ கிராண்ட் காலர்’ விருது
  4. 2019 ல் ஐக்கிய அரபு எமிரேட்சின் ‘ஆர்டர் ஆப் ஜாயீத்’

5.2019 ல் ரஷ்யாவின் ‛ஆர்டர் ஆப் செயின்ட் ஆண்ட்ரூ’ விருது

  1. 2019 ல் மாலத்தீவின் ‘ஆர்டர் ஆப் தி டிஸ்டின்குயிஷ்ட் ரூல் ஆப் நிசான் இசுதீன்’ விருது
  2. 2019ல் பஹ்ரைனின் ‘அரசர் ஹமாத்தின் மறுமலர்ச்சிக்கான’ விருது
  3. 2020ல் அமெரிக்காவின் ‘லிஜியன் ஆப் மெரிட்’ என்ற விருது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles