24.7 C
Kuala Lumpur
Thursday, September 24, 2026

Vetri

செந்தோசா சட்டமன்றத்தின் சார்பில் மாபெரும் பொங்கல் விழா!

🔥 Views : 35
👁 Reading Now : 49

செந்தோசா சட்டமன்றத்தின் சார்பில் மாபெரும் பொங்கல் விழா கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கோத்தா திங்கி ஆலயத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் விழாவில் ஏராளமான தமிழ் மக்கள் கலந்து கொண்டு பொங்கல் விழாவினை சிறப்பித்தனர். இங்கு சிறப்பு வரிசையாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் குணராஜ் அவர்கள் கலந்து கொண்டார். பொங்கல் வைத்தல் கோலப்போட்டி கோலாட்டம் பாரம்பரிய இசை நிகழ்ச்சி பரதநாட்டியம் போன்ற கலை நிகழ்ச்சிகள் இங்கு நடைபெற்றன. அங்கு வருகை தந்த மக்கள் புத்தம் புதிய பாணிகளில் பொங்கல் வைத்து சூரியனுக்கும் உழவர்களுக்கும் தங்கள் நன்றியை தெரிவித்து பொங்கல் விழாவினை சிறப்பாக கொண்டாடினார். உலகில் உள்ள தமிழ் மக்களினால் பொங்கல் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பயிர்கள் செழிக்க தனது சக்தியை வழங்கும் சூரியனுக்கும் அந்த பயிர்களை உணவாக்கும் விவசாயிகளுக்கும் மக்கள் நன்றி செலுத்தும் விதமாக இந்த பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மலேசியாவில் உள்ள அனைத்து இந்து தமிழ் மக்களும் பொங்கல் விழாவினை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். பல்லினம் வாழும் இந்த நாட்டில் சமத்துவத்துடனும் ஒற்றுமையுடனும் இவ்வாறான கொண்டாட்டங்கள் கொண்டாடப்படுவது இந்த நாட்டின் மக்களின் ஒற்றுமையை காட்டுகிறது என செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் தெரிவித்தார். பொங்கல் விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles