26.8 C
Kuala Lumpur
Wednesday, September 23, 2026

Vetri

1 எம்டிபியை என் குழந்தை என சித்தரிக்க வேண்டாம்: நஜிப்

🔥 Views : 32
👁 Reading Now : 39

1 எம்டிபி நிறுவனம் என் சிந்தனையில் உருவான  குழந்தை என சித்தரிக்க வேண்டாம்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இதனை கூறினார்.

நாட்டின் மூலோபாய முதலீட்டு நிறுவனமான 1 மலேசியா மேம்பாட்டு பெர்ஹாட்டை தாம் நிறுவிய நிறுவனத்துடன் இணைக்கும் அரசுத் தரப்பு நடவடிக்கை தவறானது.

1 எம்டிபி முதலில் ஒரு திரெங்கானு முதலீட்டு ஆணைய நிறுவனமாக இருந்தது.

அதை கடந்த 2009ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதியன்று மத்திய அரசு கையகப்படுத்தியது என்று நான் பலமுறை கூறியுள்ளேன்.

மேலும் நாட்டிற்கான புதிய எரிசக்தி முதலீடுகளைக் கண்டறியும் பொறுப்பைக் கொண்ட நிறுவனத்தை நிறுவுவது எனது யோசனையல்ல.

ஆகையால் 1 எம்டிபியை என் குழந்தை என்று இணைத்து நடக்கும் வழக்கு விசாரணையின் நடவடிக்கையை நான் எதிர்க்கிறேன்.

1 எம்டிபி என் குழந்தை என்று இணைக்க முடியாது. அதன் நிறுவலுக்கு நான் பொறுப்பல்ல.

இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நஜிப் நீதிமன்றத்தில் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles