
கடந்த ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், அந்நாட்டில் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவற்றை நாடு கடத்தி வருகிறார். கொலம்பியா, மெக்சிகோ, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் முதற்கட்டமாக நாடுகடத்தப்பட்டனர்.
கைவிலங்கிட்டு, குடிக்க தண்ணீர் இல்லாமல், விமானத்தில் ஏசி இல்லாமல் அவர்களை அமெரிக்கா கீழ்த்தரமாக நடத்தியதாக பிரேசில் குற்றம்சாட்டியது. இதற்கிடையே நாடு முழுவதும் குடிவரவு [கஸ்டம்ஸ்] அதிகாரிகள் ஆவணங்கள் இல்லாதோரை தேடித் தேடி கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மெக்சிகோ மற்றும் இத்தாலி வம்சாவளியை சேர்ந்த பிரபல அமெரிக்க பாப் பாடகி செலினா கோம்ஸ் தனது மக்கள் கொடுமைப்படுத்தப்படுவதாகவும் தன்னால் எதுவும் செய்யமுடியவில்லை எனவும் கூறி கண்ணீர் விட்டு கதறி அழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார்.
https://platform.twitter.com/embed/Tweet.html?dnt=false&embedId=twitter-widget-0&features=eyJ0ZndfdGltZWxpbmVfbGlzdCI6eyJidWNrZXQiOltdLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X2ZvbGxvd2VyX2NvdW50X3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9iYWNrZW5kIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19yZWZzcmNfc2Vzc2lvbiI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZm9zbnJfc29mdF9pbnRlcnZlbnRpb25zX2VuYWJsZWQiOnsiYnVja2V0Ijoib24iLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X21peGVkX21lZGlhXzE1ODk3Ijp7ImJ1Y2tldCI6InRyZWF0bWVudCIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZXhwZXJpbWVudHNfY29va2llX2V4cGlyYXRpb24iOnsiYnVja2V0IjoxMjA5NjAwLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X3Nob3dfYmlyZHdhdGNoX3Bpdm90c19lbmFibGVkIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19kdXBsaWNhdGVfc2NyaWJlc190b19zZXR0aW5ncyI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdXNlX3Byb2ZpbGVfaW1hZ2Vfc2hhcGVfZW5hYmxlZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdmlkZW9faGxzX2R5bmFtaWNfbWFuaWZlc3RzXzE1MDgyIjp7ImJ1Y2tldCI6InRydWVfYml0cmF0ZSIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfbGVnYWN5X3RpbWVsaW5lX3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9mcm9udGVuZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9fQ%3D%3D&frame=false&hideCard=false&hideThread=false&id=1884214318381838843&lang=ta&maxWidth=560px&origin=https%3A%2F%2Fwww.maalaimalar.com%2Fnews%2Fworld%2Fillegal-aliens-white-house-releases-video-for-singer-selena-gomez-crying-758792&sessionId=29fa571d0b5b20c484e6e0191975434cfbec4bb2&theme=light&widgetsVersion=2615f7e52b7e0%3A1702314776716&width=550px
சில மணி நேரங்களிலேயே அதை அவர் நீக்கினார். ஆனால் இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இந்த வீடியோவுக்கு வெள்ளை மாளிகை பதிலடி கொடுத்துள்ளது.
சட்டவிரோத குடியேறிகளால் கொல்லப்பட்டதாக கூறப்படும் 3 நபர்களுடைய தாய்மார்களின் வீடியோவை வெள்ளை மாளிகை பகிர்ந்துள்ளது. கெய்லா ஹாமில்டன், ஜோஸ்லின் நுங்கரே மற்றும் ரேச்சல் மோர் ஆகியோரின் பிள்ளைகள் சட்டவிரோத ‘ஏலியன்’களால் கொல்லப்பட்டனர்.
செலினா கோம்ஸ்-க்கும் நமது எல்லைகளைப் பாதுகாப்பதை எதிர்ப்பவர்களுக்கும் இந்த துணிச்சலான தாய்மார்கள் சொல்வது இதுதான் என்று இந்த வீடியோவை வெள்ளை மாளிகை பகிர்நதுள்ளது.
https://platform.twitter.com/embed/Tweet.html?dnt=false&embedId=twitter-widget-1&features=eyJ0ZndfdGltZWxpbmVfbGlzdCI6eyJidWNrZXQiOltdLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X2ZvbGxvd2VyX2NvdW50X3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9iYWNrZW5kIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19yZWZzcmNfc2Vzc2lvbiI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZm9zbnJfc29mdF9pbnRlcnZlbnRpb25zX2VuYWJsZWQiOnsiYnVja2V0Ijoib24iLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X21peGVkX21lZGlhXzE1ODk3Ijp7ImJ1Y2tldCI6InRyZWF0bWVudCIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZXhwZXJpbWVudHNfY29va2llX2V4cGlyYXRpb24iOnsiYnVja2V0IjoxMjA5NjAwLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X3Nob3dfYmlyZHdhdGNoX3Bpdm90c19lbmFibGVkIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19kdXBsaWNhdGVfc2NyaWJlc190b19zZXR0aW5ncyI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdXNlX3Byb2ZpbGVfaW1hZ2Vfc2hhcGVfZW5hYmxlZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdmlkZW9faGxzX2R5bmFtaWNfbWFuaWZlc3RzXzE1MDgyIjp7ImJ1Y2tldCI6InRydWVfYml0cmF0ZSIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfbGVnYWN5X3RpbWVsaW5lX3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9mcm9udGVuZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9fQ%3D%3D&frame=false&hideCard=false&hideThread=false&id=1885466675765559741&lang=ta&origin=https%3A%2F%2Fwww.maalaimalar.com%2Fnews%2Fworld%2Fillegal-aliens-white-house-releases-video-for-singer-selena-gomez-crying-758792&sessionId=29fa571d0b5b20c484e6e0191975434cfbec4bb2&theme=light&widgetsVersion=2615f7e52b7e0%3A1702314776716&width=550px
அதில் பேசும் அவர்கள், ‘நீங்கள் [செலினா கோம்ஸ்] யாருக்காக அழுகிறீர்கள் என உங்களுக்கு தெரியாது. சட்டவிரோத குடியேறிகளால் வன்கொடுமை செய்யப்பட்டு, அடித்து கொடூரமாக கொல்லப்பட்ட எங்கள் பிள்ளைகளுக்கு என்ன பதில். அவர்கள் எங்கள் பிள்ளைகளுக்காக அழவில்லையே’ என்று தெரிவித்தனர்.
மேலும் செலினா கோம்ஸ் பொய்யான அழுகையை வெளிப்படுத்தி நாட்டில் சட்டமற்ற நிலையை ஊக்குவிப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினார்.
