28.5 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு

🔥 Views : 7
👁 Reading Now : 39

அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி பணம் வாங்கி மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

அ.தி.மு.க. பிரமுகர் நல்லதம்பி என்பவர் மூலம் 33 பேரிடம் மொத்தம் ரூ.3 கோடி வசூலித்து மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2021ல் பதியப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது.

அதனை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி, விஜய நல்லதம்பி, மாரியப்பன் ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டம், மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அடுத்த கட்டமாக அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ள சி.பி.ஐ. நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. வழக்கை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலத்தின் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles