27.9 C
Kuala Lumpur
Wednesday, September 23, 2026

Vetri

உறவுகள் தேடி 1979″ முன்னாள் மாணவர்கள் சங்கமம்: 47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்

🔥 Views : 868
👁 Reading Now : 69

கடந்து வந்த பாதையில் எத்தனையோ மனிதர்களைச் சந்தித்திருந்தாலும், வாழ்வின் வசந்த காலத்தை ஒன்றாகக் கழித்த பள்ளித் தோழமைகளை மீண்டும் சந்திக்கும் சுகமே தனி. கடந்த ஜூலை 19, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில், காப்பார், தாமான் சுங்கை காப்பார் இண்டாவில் உள்ள எஸ்.எம்.வி. வெடிங் மண்டபத்தில் “உறவுகள் தேடி 1979” புலனக் குழுவின் 2026-ஆம் ஆண்டிற்கான மாபெரும் வருடாந்திர ஒன்றுகூடல் நிகழ்வு மிக உணர்ச்சிப்பூர்வமாக, ஒரு வண்ணமயமான ‘கலர் ஸ்டோரி’ போல அரங்கேறியது.

இவ்விழாவிற்கு, 1974-ஆம் ஆண்டில் காப்பார் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளியில் கல்வி போதித்த முன்னாள் ஆசிரியர் எஸ்.தி. தென்னரசு சிறப்பு வருகையளித்துக் கௌரவித்தார். அவர் தனது மாணவர்களுடன் 1974-இல் நடந்த சுவாரசியமான சம்பவங்களை மிக அழகாகப் பகிர்ந்து கொண்டது நெஞ்சை நெகிழச் செய்தது. விழாவில், எஸ்.தி. தென்னரசுக்கு பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து மிகச் சிறப்பான முறையில் உயரிய கௌரவம் செய்யப்பட்டது.

நாலாபுறமும் சிதறிக்கிடந்த தோழமைகளைத் தேடிக் கண்டுபிடித்து, இத்தனை ஆண்டுகளாகக் கட்டுக்கோப்பாக வழிநடத்தி வரும் புலனக்குழுத் தலைவர் நா. இளங்கோவன் ஏற்பாட்டில், வந்திருந்த முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் பொன்னாடைப் போர்த்தி, மாலை அணிவித்துச் சிறப்பு செய்யப்பட்டது. அதேவேளையில், தங்களை எல்லாம் ஒன்று சேர்த்த அந்த நல்ல உள்ளத்திற்கு மகுடம் சூட்டும் வகையில், தோழிகள் அனைவரும் ஒன்றிணைந்து தலைவர் நா. இளங்கோவனுக்கு ஒரு உன்னதமான அன்புப் பரிசை வழங்கி நெகிழ்ச்சியூட்டினர்.

விழாவில் எஸ்.எம்.ஜே.கே. மற்றும் சூ ஜின் சீனப்பள்ளிக்கு ஒன்றாக நடந்து சென்ற பழைய நினைவுகள் அலை அலையாக மோதின. 16 வயதுத் துள்ளலில் இருந்து இன்று 63 வயதை எட்டியிருந்தாலும், தோழமைகள் அனைவரும் தங்களின் பழைய பள்ளிப்பருவ நினைவுகளை மேடையில் மிகச் சுவையாகப் பகிர்ந்து கொண்டனர். நண்பர்களின் இந்த அன்பான சூழலுக்குப் பெருவிருந்தாக, அங்கு பரிமாறப்பட்ட சுவையான உணவு வகைகள் அனைவரின் நாவிலும் மனதிலும் நீங்கா இடம்பிடித்தன.

நம்மைவிட்டுப் பிரிந்த நண்பர்களின் நினைவுகளுடன், “இருப்பவர்களையாவது நேரில் கண்டு நலம் விசாரிக்க வேண்டும்” என்ற உன்னத நோக்கத்துடன் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, பாசமழை பொழிந்த ஒரு வரலாற்றுத் தருணமாக நிறைவுற்றது

படவிளக்கம்

நிகழ்வின் ஏற்பாட்டுக்குழுத் தலைவர் நா. இளங்கோவனுக்கு முன்னாள் ஆசிரியர் தென்னரசு சிறப்பு செய்கிறார்.

விழாவில் கலந்து கொண்ட உறவைத்தேடி 1979 முன்னாள் மாணவர்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles