25.3 C
Kuala Lumpur
Thursday, September 24, 2026

Vetri

சட்டவிரோத வெளிநாட்டு வணிகங்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை; அரசாங்கம் புதிய யுக்திகள் அறிவிப்பு!

🔥 Views : 2,552
👁 Reading Now : 38

நாட்டில் அதிகரித்து வரும் சட்டவிரோத வெளிநாட்டு வணிக நடவடிக்கைகளுக்கு எதிராக அமலாக்கத்தை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சட்டவிரோத வணிக நடவடிக்கைகள் உள்ளூர் தொழில்துறையினரின் வளர்ச்சியையும் போட்டித்திறனையும் பாதித்து வருவதால், அவற்றை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் அவசியம் என அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இந்த முடிவு, பொருளாதார அமைச்சர் டத்தோ அக்மால் நசீர் தலைமையில் நடைபெற்ற ‘Pemudah’ (Special Taskforce to Facilitate Business) எனப்படும் வணிக எளிமைப்படுத்தலுக்கான சிறப்புப் பணிக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

அமைச்சின் அறிவிப்பின்படி, இணக்கம் (Compliance), கண்காணிப்பு (Monitoring) மற்றும் ஒருங்கிணைந்த அமலாக்கம் (Integrated Enforcement) ஆகிய மூன்று முக்கிய யுக்திகளை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மேலும், விசா மற்றும் கடப்பிதழ்களை தவறாகப் பயன்படுத்தி சட்டவிரோதமாக நடத்தப்படும் வணிகங்கள், உள்நாட்டு வர்த்தகர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், இத்தகைய முறைகேடான வணிக நடவடிக்கைகளை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவது அல்லது தற்போதுள்ள சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்தும் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

போட்டித்திறனுக்கான உலகளாவிய தரவரிசையில் மலேசியா தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், உள்ளூர் வர்த்தகர்களுக்கு நியாயமான மற்றும் சமமான வணிகச் சூழலை உறுதிப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என பொருளாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles