27.8 C
Kuala Lumpur
Sunday, September 27, 2026

Vetri

சுபாங் ஜெயா அடுக்குமாடி குடியிருப்பில் குடிநுழைவுத் துறை அதிரடி சோதனை; 34 வெளிநாட்டவர்கள் கைது

🔥 Views : 1,235
👁 Reading Now : 67

சிலாங்கூர், சுபாங் ஜெயாவில் உள்ள Seri Nipah அடுக்குமாடி குடியிருப்பில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட குடிநுழைவுத் துறையின் அதிரடி சோதனையில், பல்வேறு குடிநுழைவு விதிமீறல்களுக்காக 34 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின்போது மொத்தம் 280 பேரின் ஆவணங்கள் சோதனை செய்யப்பட்டன. அவர்களில் 34 பேர் குடிநுழைவுச் சட்டம் மற்றும் விதிமுறைகளை மீறியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

முறையான அடையாள மற்றும் பயண ஆவணங்கள் இல்லாதது, அனுமதிச் சீட்டின் நிபந்தனைகளை மீறியது, அனுமதிக்கப்பட்ட காலத்தைத் தாண்டி நாட்டில் தங்கியிருந்தது மற்றும் அங்கீகரிக்கப்படாத அட்டைகளை வைத்திருந்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கைதானவர்கள் 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள். அவர்களில் 23 பேர் ஆண்கள், 11 பேர் பெண்கள் ஆவர். இந்தோனேசியா, வங்காளதேசம், இந்தியா, மியான்மர், நேபாளம், தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதில் அடங்குவர்.

சோதனை நடவடிக்கையின்போது அதிகாரிகள் பலமுறை கதவுகளைத் தட்டியும் சில வீடுகளில் இருந்தவர்கள் கதவுகளைத் திறக்க மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும் சிலர் அதிகாரிகளைக் கண்டதும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றதாக குடிநுழைவுத் துறை தெரிவித்தது.

கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக விசாரணை மற்றும் நடவடிக்கைகளுக்காக Semenyih குடிநுழைவு தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதனிடையே, அந்த அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறிய சில குடியிருப்பாளர்கள், குடிபோதை மற்றும் சண்டை சம்பவங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles