33.3 C
Kuala Lumpur
Monday, September 28, 2026

Vetri

டாமன்சாராவில் வன்னி மரத்து பிள்ளையார் ஆலய முதலாம் ஆண்டு திருவிழா சிறப்பாக நடைபெற்றது!

🔥 Views : 4,012
👁 Reading Now : 31

டாமன்சாராவில் அமைந்துள்ள வன்னி மரத்து பிள்ளையார் ஆலயத்தின் முதலாம் ஆண்டு திருவிழா பக்திபூர்வமாகவும் வெகு சிறப்பாகவும் நடைபெற்றது.

இத்திருவிழாவில் டாமன்சாரா மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை வழிபட்டு அருள் பெற்றனர்.

திருவிழாவை முன்னிட்டு விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களின் வழிபாட்டிற்காக சிறப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வேண்டுதல்களை முன்வைத்து வழிபட்டனர். இதனால் ஆலய வளாகம் முழுவதும் பக்தி பரவசத்துடன் காணப்பட்டது.

வன்னி மரத்து பிள்ளையார் ஆலயத்தின் முதலாம் ஆண்டு திருவிழா, பக்தர்களின் பேராதரவுடன் சிறப்பாக நிறைவடைந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles