
திரங்கானு, டுங்குனில் உள்ள தாஹ்ஃபிஸ் சமயப் பள்ளி ஒன்றின் மூன்று மாணவர்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் புகார்கள் தொடர்பில், அப்பள்ளியின் முன்னாள் முதல்வரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், 13 முதல் 14 வயதுடைய மூன்று மாணவர்கள் பாலியல் தாக்குதலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. நேற்று, பாதிக்கப்பட்ட தரப்பினரிடமிருந்து மூன்று தனித்தனி போலீஸ் புகார்கள் பெறப்பட்டதாக டுங்குன் மாவட்டப் போலீஸ் தலைவர் சூப்ரிடெண்டன்ட் நிக் அப் ஹலீம் நிக் மாட் தெரிவித்தார்.
இதையடுத்து, 26 வயதான சந்தேக நபர் நேற்றிரவே கைது செய்யப்பட்டார். அவர் தற்போது அதே மாவட்டத்தில் மற்றொரு சமயப் பள்ளியில் பகுதிநேர ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
2017-ஆம் ஆண்டு சிறார் பாலியல் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ள, சந்தேக நபர் ஐந்து நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.



