25.9 C
Kuala Lumpur
Monday, September 28, 2026

Vetri

RM50 மில்லியன் இலக்கில் RM9.25 மில்லியன் மட்டுமே! நஜிப்பின் அபராதத்திற்கான நிதித் திரட்டல் இலக்கை எட்டவில்லை!

🔥 Views : 2,204
👁 Reading Now : 61

டத்தோஸ்ரீ நஜிப் ரசாக், தனது தண்டனையின் மீதமுள்ள காலத்தை வீட்டுக் காவலில் கழிப்பதற்கான நிபந்தனையாக விதிக்கப்பட்ட RM50 மில்லியன் அபராதத்தைச் செலுத்த உதவும் நிதித் திரட்டல், இன்று காலை 10 மணி நிலவரப்படி RM9.25 மில்லியனை எட்டியுள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் சுமார் 18.5 விழுக்காடு மட்டுமே.

அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி, இந்தத் தொகை இலக்கை எட்டுவதற்கு இன்னும் போதுமானதாக இல்லை என ஒப்புக்கொண்டுள்ளார். “தற்போதைய நிலவரப்படி RM9.25 மில்லியன் வசூலிக்கப்பட்டுள்ளது, ஆனால் RM50 மில்லியன் என்ற இலக்கை அடைய இது இன்னும் போதுமானதாக இல்லை” என்று அவர் கூறினார்.

நிதி வசூலை அதிகரிக்க முயற்சி: வசூலை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட ஜாஹித், மன்னிப்பு வாரியம் நிர்ணயித்த தொகையை எட்ட, வரும் காலத்தில் நண்பர்கள் உதவ முடியும் என தான் நம்புவதாகத் தெரிவித்தார். வீட்டுக் காவலை முழுமையாக அமல்படுத்துவதற்கு முன்பு, இந்தத் தொகை செலுத்தப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles