30.5 C
Kuala Lumpur
Friday, September 25, 2026

Vetri

மக்களுக்கு எதையுமே செய்யவில்லை, வெறும் சுலோகம் மட்டுமே – எதுவுமே இல்லை! டத்தோஸ்ரீ தனேந்திரன் சாடல்

🔥 Views : 2,293
👁 Reading Now : 31

கோலாலம்பூர் செப் 25-
ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கண்ட தோல்வியால் பக்கத்தான் ஹராப்பான் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறது.

இதனால் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களும் மன அழுத்தம் அடைந்துள்ளார்.

நெகிரி செம்பிலான் மாநிலத்திலும் ஏகப்பட்ட குழப்பங்கள்.

இந்த நான்கு ஆண்டுகளில் இந்த அரசாங்கம் எதையுமே செய்யவில்லை.

வெறும் சுலோகம் மட்டுமே. செயல் திட்டங்கள் இல்லை. எந்த வாக்குறுதியும் நிறைவேற்ற முடியவில்லை.

வெளிநாட்டு முதலீடுகள் இல்லை. மக்களும் பெரும் அச்சத்தில் உள்ளனர் என்று மக்கள் சக்தி கட்சியின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஆர் எஸ் தனேந்திரன் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles