31.1 C
Kuala Lumpur
Sunday, October 4, 2026

Vetri

சிலாங்கூர் மாநிலத்தில் அடுத்த ஆட்சி, தேசிய முன்னணி ஆட்சி! – டத்தோ சங்கர்!

🔥 Views : 571
👁 Reading Now : 52

சிலாங்கூர் மாநிலத்தில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேசிய முன்னணி ஆட்சி அமைய இருக்கிறது என்று மஇகா சிலாங்கூர் மாநிலத் தலைவர் டத்தோ சங்கரன் ஐயங்கார் இன்று தெரிவித்தார்.

சிலாங்கூர் மஇகா-வின் 80 ஆம் ஆண்டு பேராளர் மாநாடு இன்று ஷா ஆலம் ஐடிசிசி மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ சங்கரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேசிய அளவில் தேசிய முன்னணி மீண்டும் வலுவடைந்து வருவதற்கு ஏற்ப சிலாங்கூர் மாநிலத்திலும் தேசிய முன்னணி முன்னைக் காட்டிலும் உன் தற்பொழுது வலிமை அடைந்து வருகிறது.

தற்பொழுது நடைபெற்று வருகின்ற நம்பிக்கை கூட்டணி தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை அவதானித்து வரும் மக்கள், முந்தைய தேசிய முன்னணி ஆட்சியே சிறந்தது என்று எண்ணத் தொடங்கி விட்டனர்.

தேசிய முன்னணியில் உறுப்பியம் பெற்றுள்ள மஇகாவும் முன்னைவிட மக்களின் பேராதரோடு குறிப்பாக இந்திய சமுதாயத்தில் மிகவும் வலுவான நிலையை எட்டி உள்ளது.

மஇகாவின் வெற்றி அத்தியாயம் மீண்டும் தொடங்கியுள்ளது; பழையபடி 100% வெற்றியை நோக்கி பயணிக்கின்ற மஇகா, அண்மைய நெகிரி செம்பிலான் சட்டமன்ற தேர்தலில் ஒரு சில பின்னடைவுகளால் கைக்கெட்டிய வெற்றி வாய்ப்பை தவறிவிட்டாலும் சிலாங்கூர் மாநிலத்தில் 100 விழுக்காடு வெற்றியை பெரும் என்றார்.

மஇகா தேசியத் தலைவர் சுட்டிக்காட்டியதைப் போல வரும் சட்டமன்றத் தேர்தலில் மூன்று இடங்களில் மஇகா போட்டியிடும் என்றும் மூன்று இடங்களிலும் வெற்றிக் கொடி நாட்டுவோம் என்று சங்கரன் நம்பிக்கை தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற மாநில மாநாடு கட்சியினரிடையே மிகுந்த உற்சாகத்தையும் உந்துதலையும் அளித்துள்ளது. அதன் அடிப்படையில் இப்பொழுது இருந்தே சம்பந்தப்பட்ட தொகுதிகளில் உரிய அடிப்படைப் பணிகளை மஇகா மேற்கொள்வோம் என்று தெரிவித்தார்.

தேசிய தலைமையின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப மாநில மஇகா தொடர்ந்து மக்கள் பணி ஆற்றும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles