33.5 C
Kuala Lumpur
Wednesday, October 7, 2026

Vetri

மலேசிய-இந்திய நாட்டு கலைஞர்கள் மத்தியில் கலை பண்பாடு மற்றும் நட்புறவை மேம்படுத்த இரு வழி புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் கையொப்பம்!

🔥 Views : 1,732
👁 Reading Now : 56

மலேசிய மற்றும் இந்திய நாட்டு கலைஞர்கள் மத்தியில் நிலவும் கலை, பண்பாடு மற்றும் நட்புறவு நிலைகளை அடுத்த உயர் நிலைக்கு மேம்படுத்தும் நோக்கில்,இரு வழி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று மலேசிய நாட்டின் பிரசித்திபெற்ற இயக்கமான மிக்காஸ்-டெலி ஸ்டாருக்கும்,;(MICAS-TELESTAR) தமிழ் நாட்டின் தமிழ்க் கலை இசை சங்கமம் இயக்கத்திற்குமிடையில் கையொப்பமானது.
மலேசிய நாட்டின் இயக்கத் தலைவர் எஸ்.பி.மணிவாசகமும் தமிழ் நாட்டின் முன்னாள் ஐ.ஏ.ஸ் அதிகாரியும் மதுரையின் முன்னாள் கலெக்டரும்,தமிழ் கலை இசை சங்கமத்தின் நிறுவனரும் ,மிகச் சிறந்த கலைஞருமான உயர்திரு காமராஜும் இந்த இருவழி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.
இந்த வரலாற்றுப்பூர்வமான நிகழ்ச்சியினை மலேசிய கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும் , உலக தமிழ் பண்பாட்டு இயக்கத் தலைவருமான தொழிலதிபர் டத்தோ கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கி சிறப்புச் சேர்த்தார்.
இவ்வொப்பந்தத்தின் வாயிலாக இரு நாட்டு கலைஞர்களும் தகுந்த வழிமுறையுடன் முறையாக அந்தந்த நாட்டிக்கு பயணமேற்கொண்டு கலை மேம்பாட்டிற்கு பங்காற்றுவர். கலை நிகழ்ச்சிகள், மேடை நாடகங்கள், நாட்டுபுற கலைப்படைப்புகள்,நடனங்கள் என பல்வேறு கலை சார்ந்த அரங்கேற்றங்கள் நடைபெற இவ்விரு இயக்கங்களும் பாடுபட்டு, அத்துறை கலைஞர்களை கௌரவித்து உகந்த மரியாதையையும் வழங்கும் என உறுதி கொண்டுள்ளனர்.


முதல் கட்டமாக “ சென்னையில் பொன்னந்தி மாலைப் பொழுது”எனும் பிரமாண்டமான கலை மாலை அரங்கேற்றம் கண்டது. மலேசிய கலைஞர்களும் இந்திய கலைஞர்களும் இணைந்து 4 மணி நேர இசை சங்கமித்தினர். இத்தகைய கலை பரிமாற்றம் 2027-ஆம் ஆண்டு மலேசிய நாட்டில் நடைபெறும் என்றும் ஒவ்வொரு ஆண்டும் இக்கலை விழா இரு நாட்டிலும் நடத்த உறுதி கொண்டுள்ளனர்.
இந்திய ஏற்பாட்டுக்குழுத் தலைவர் உயர்திரு காமராஜ் பேசுகையில்,” இது உயர் நட்பால் ஏற்பட்ட உறவு, கலை ஈடுபாட்டாலும் புரிந்துணர்வாலும் அமையப்பட்ட பந்தம், இதனை தேர்த்தியாக வளர்ப்பது நம் தலையாய கடமையாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles