26.4 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

தாய், தந்தை உட்பட 11 பேருக்கு எதிராக நடிகர் விஜய் வழக்கு!

🔥 Views : 5
👁 Reading Now : 55

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6, 9 ஆகிய திகதிகளில் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 20 மாவட்ட நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.விஜய்யின் மக்கள் இயக்கம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும். ஆனால் நடிகர் விஜய்யின் பெயரை, மக்கள் இயக்கத்தை பயன்படுத்தாமல் சுயேட்சையாக போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 128 பேர் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில் தனது பெயரையோ, தனது ரசிகர் மன்றத்தின் பெயரையோ பயன்படுத்துவதை தடை செய்யக் கோரி தனது தந்தை மற்றும் தாய் உட்பட 11 நபர்கள் மீது நடிகர் விஜய் சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இம்மாத இறுதியில் விசாரணைக்கு வரவுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles