33.9 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

சிறையில் உள்ள இலங்கை தமிழ் இளைஞர்களுக்கு போது மன்னிப்பு

🔥 Views : 6
👁 Reading Now : 25

இலங்கையில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பிலான சட்ட செயற்பாடுகள் முடிவடைந்ததும் அவர்களை பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க தாம் தயங்கப் போவதில்லை என அதிப கோட்டாபயா ராஜபக்சே தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ கோட்டாபயா ராஜபக்சே இடையிலான சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐநா பொதுச் சபைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா நியூயார்க் நகருக்கு வருகை மேற்கொண்டுள்ள இலங்கை அதிபர், ஐநா தலைமையகத்தில், பொதுச் செயலாளரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles