33.9 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

கிள்ளான் மருத்துவமனை சவக்கிடங்கில் சடலங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தன

🔥 Views : 7
👁 Reading Now : 51

நாட்டில் 4ஆம் கட்ட கோவிட் அலை கடந்த ஜூன் மாதம் பரவத் தொடங்கியபோது ஆயிரக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டபோது நிலைமை மிகவும் மோசமாக இருந்ததாக கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் தடயவியல் நிபுணர், டாக்டர் நூர் அயூதிமாசெரி அப்துல்லா தெரிவித்தார். இடைவிடாமல் தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்த சடலங்களை மிகவும் குறுகிய நேரத்தில் நிர்வகித்த அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டார். நாங்கள் எப்போதும் அடுத்த நாளில் என்னென்ன நடக்குமோ என்பதை நினைத்துக் கொண்டே இருந்தோம். இரவு நேரங்களில் தூங்க முடியவில்லை. நோய்த்தொற்று தாக்கத்தினால் இறந்தவர்களின் சடலங்கள் எப்படி விரைந்து கொடுப்பதில் தீவிரமாக ஈடுபட்டோம். இறந்துபோன தங்களது குடும்ப உறுப்பினர்களை கடைசியாக ஒருமுறை பார்க்க குடும்ப உறுப்பினர்கள் காத்திருந்த காட்சிகளும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles