
நாடாளுமன்ற கூட்டத் தொடரை வழி நடத்த தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஙா கோர் மிங்மிற்கு அழைப்பு விடுத்தேன். ஆனால் அதை கடைசி நேரத்தில் மீட்டுக் கொண்டதாக நாடாளுமன்ற சபாநாயகர் டத்தோ அஸாஹர் தெரிவித்தார். இதை மீட்டுக் கொள்ளும்படி மூத்த அமைச்சர் ஒருவர் நெருக்குதல் கொடுத்ததாக கூறப்படுவதை அவர் மறுத்தார். ஙா கோர் மிங்மிற்கு அழைப்பு விடுத்தேன். அது உண்மைதான். ஆனால் கடைசி நேரத்தில் என் முடிவை மாற்றிக் கொண்டேன் என்று அவர் விளக்கமளித்துள்ளார்.
