
நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தெலுக் இந்தான் நாடாளுமன்ற நாடாளுமன்ற உறுப்பினர், ஙா கோர் மிங் தலைமையேற்பதை மூத்த அமைச்சர் ஒருவர் தடுத்துள்ளார். இக்கூட்டத்திற்கு மக்களவைச் சபாநாயகர், அஸார் ஹருண் தலைமையேற்க எழுத்துப்பூர்வமான முறையில் ஙா கோர் மிங் அழைக்கப்பட்டார். ஆனால் மூத்த அமைச்சரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததை தொடர்ந்து அது மீட்டுக் கொள்ளப்பட்டது. இது தொடர்பில் பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் இன்று கேள்வி எழுப்பினார். தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஙா கோர் மிங் நாடாளுமன்ற கூட்டத் தொடரை வழிநடத்த தடுத்து நிறுத்தியது உண்மையா அல்லது இல்லையா இன்று மூத்த அமைச்சர் அஸ்மின் அலியை நோக்கி அவர் சவால் விடுத்தார். தைரியம் இருந்தால் என் கேள்விக்கு எழுந்து நின்று பதில் சொல்லுங்கள் கோபிந்த் சிங் நேரடி சவால் விடுத்தார்.
