
பத்து நாடாளுமன்றத் தொகுதியில் புதிய ஜசெக கிளை திறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஜசெக கிளைக்கு ரவிந்திரன் வெங்கடசாமி தலைவராக பொறுப்பேற்று உள்ளார். ஜசெக தலைவரும் செராஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான டான் கோக் வாய் இந்த புதிய ஜசெக கிளைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளார். எனது தலைமையில் பத்து நாடாளுமன்றத் தொகுதியில் மேலும் புதிய ஜசெக கிளைகள் அமைக்கப்படும் என்று ரவீந்திரன் தெரிவித்தார்.



