
மலாக்கா மாநிலத் தேர்தலை எதிர்கொள்ள அம்னோ, தே.மு. உட்பட தோழமைக் கட்சிகளுடன் ஒத்துழைப்பை மேற்கொள்ளும் விதம் குறித்து பெரிக்காத்தான் இன்னும் குறுகிய காலத்தில் அறிவிக்கும் என்று அதன் தலைமைச் செயலாளர், டத்தோஸ்ரீ ஹம்சா ஸைனுடின் தெரிவித்தார். இந்த ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்ள இதர தோழமைக் கட்சிகளுடன் பெர்சத்து, பாஸ், கெராக்கான் உட்பட பெரிக்காத்தானின் உறுப்புக் கட்சிகள் கலந்துரையாடலை நடத்தும். இத்தேர்தலை எதிர்கொள்ள எம்மாதிரியான ஒத்துழைப்பு ஏற்படுத்திக் கொள்ளப்படும் என்பது குறித்து இந்த குறுகிய காலத்தில் அறிவிக்கப்படும் என்றார்.
