
நாட்டில் கோவிட்-19 தடுப்பூசி போடும் திட்டத்தில் இதுவரை 2 கோடியே 19 லட்சத்து 93 ஆயிரத்து 417 பேருக்கு இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 2 கோடியே 27 லட்சத்து 56 ஆயிரத்து 938 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக அது தெரிவித்தது. இதனிடையே 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 9 லட்சத்து 40,960 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர். மேலும், 24 லட்சத்து 83 ஆயிரத்து 693 பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
