
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் 28 தொகுதிகளில் 12இல் போட்டியில் போட்டியிடுவதற்கு கெஅடிலான் கட்சி முடிவு செய்துள்ளது. 2018இல் நடந்த தேர்தலில் கெஅடிலான் 8 தொகுதிகளில் போட்டியிட்டு மூன்றில் வெற்றி பெற்றது. ஜசெக 8 தொகுதியில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி பெற்றது. அமானா 6 தொகுதியில் போட்டியிட்டு 2 இல் வெற்றி பெற்றது. பெர்சத்து 6 தொகுதியில் போட்டியிட்டு 2இல் வெற்றி பெற்றது. கடந்த பொதுத் தேர்தலில் மலாக்கா மாநிலத்தில் பெர்சத்து ஒதுக்கப்பட்ட ஆறு தொகுதிகளில் நான்கில் போட்டியிட கெஅடிலான் முடிவு செய்துள்ளது.
