
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 20ஆம் தேதி நடைபெறும் வேளையில் நவம்பர் 8 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் இடம்பெறுகிறது. மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் அடுத்த மாதம் நடைபெறும் தேசிய முன்னணி மற்றும் அம்னோ கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி குறிப்பிட்டார். தேசிய முன்னணி கூட்டத்தில் ஒரு தெளிவான முடிவு எடுக்கப்படும் என்றார் அவர்.
