24.7 C
Kuala Lumpur
Thursday, July 30, 2026

Vetri

மலாக்கா மாநிலத் தேர்தல்: பேச்சுவார்த்தைக்கு பெரிக்காத்தான் மறுக்கவே இல்லை!

🔥 Views : 23
👁 Reading Now : 31

தேசிய முன்னணியுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த பெரிக்கத்தான் நேஷனல் ஒரு போதும் மறுக்கவே இல்லை என்பதால் மலாக்கா மாநிலத் தேர்லில் இணைந்து ஒத்துழைக்கத் தயாரா இல்லையா என்பதை அதன் கூட்டணிக் கட்சிகள் உடனடியாக இறுதி முடிவெடுக்க வேண்டும் என்று பெரிக்காத்தானின் தேர்தல் இயக்குநர் அஸ்மின் அலி வலியுறுத்தினார். இது முக்கியமானதாகக் கருதப்படுவதற்குக் காரணம் கட்சியின் அடிமட்டத்திலிருந்து தேர்தல் இயந்திர முன்னேற்பாடுகள் சிறப்பாகச் செயல்படுவதை உறுதிப்படுத்துவதற்கே ஆகும். இதில் பெர்சத்து, பாஸ், கெராக்கான் மற்றும் பெரிக்காத்தானும் வேட்பாளர் நியமன தினத்தை எதிர்கொள்ளும் நிலைக்கு வந்து விட்டன.க்ஷ எனினும், இது தொடர்பில் அம்னோ இறுதி முடிவெடுக்கவில்லை. அதனால் இறுதி நேரத்தில் இல்லாமல் முன்கூட்டியே அம்னோ முடிவுச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles