26.4 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

வருமானம் பாதிக்கப்பட்ட டாக்ஸி ஓட்டுனர்களுக்கு மாண்புமிகு கருப்பையா உதவிக்கரம்

கோவிட் நோய்த்தொற்று தாக்கத்தினால் நாட்டில் உள்ள டாக்ஸி ஓட்டுனர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் நடமாட்ட உத்தரவால் டாக்ஸி ஓட்டுனர்கள் வருமானம் இல்லாமல் பெரும் இழப்பை எதிர் நோக்கினர். இந்நிலையில் தீபாவளியைக் கொண்டாடும் டாக்ஸி ஓட்டுனர்களுக்கு உதவும் வகையில் கெடா பாடாங் செராய் வட்டாரத்தைச் சேர்ந்த 50 டாக்ஸி ஓட்டுனர்களுக்கு பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கருப்பையா உதவி கரம் நீட்டினார். இவர்கள் படும் கஷ்டத்தை புரிந்து கொண்ட மாண்புமிகு கருப்பையா அனைவருக்கும் கணிசமான நிதி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles