29 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

🚨 பகாங் அரண்மனை எச்சரிக்கை: போலி டிக்டாக் கணக்குகள்

🔥 Views : 6
👁 Reading Now : 58

பகாங் சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துதீன் ஷா பொதுமக்களுக்கு உதவிகள் வழங்குகிறார் என்ற பெயரில் டிக்டாக்கில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என பகாங் அரண்மனை மறுத்துள்ளது.

சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு போலி கணக்கின் மூலம்,
பரிசு பெறுவதற்காக பயனர்கள் தங்களது தகவல்கள் மற்றும் தொலைபேசி எண்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது, பொதுமக்களை ஏமாற்றும் நோக்கில், சுல்தானின் பெயரும் படமும் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாக அரண்மனை தெரிவித்துள்ளது.

மேலும்,
தெங்கு அம்புவான் பகாங் துங்கு அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா அவர்களின் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் இயங்கும் கணக்குகளும் போலியானவை என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, முகநூல் (Facebook) மற்றும் டிக்டாக் (TikTok) தளங்களில் காணப்படும் இத்தகைய கணக்குகள் எதுவும் அதிகாரப்பூர்வமானவை அல்ல என பகாங் அரண்மனை தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் இத்தகைய மோசடிகளுக்கு எச்சரிக்கையாக இருந்து, தங்களது தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles