34 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

🚨 செந்தூல் LRT கழிப்பறை சம்பவம்: இளைஞருக்கு RM3,500 அபராதம்

🔥 Views : 25
👁 Reading Now : 40

செந்தூல் LRT ரயில் நிலையத்தில் உள்ள பொதுக் கழிப்பறைக்குள் ஒரு பெண்ணைப் பின்தொடர்ந்த வழக்கில், 22 வயதான உணவக ஊழியருக்கு RM3,500 அபராதம் விதித்து மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அப்துல் சமாத் ஒஸ்மான் என்ற குற்றம் சாட்டப்பட்டவர், மாஜிஸ்திரேட் ஐனா அஸஹ்ரா அரிபின் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அபராதத்தை செலுத்தத் தவறினால், அவருக்கு நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி காலை 8 மணியளவில், செந்தூல் LRT நிலையக் கழிப்பறையில் இடம்பெற்றது. அப்போது, 43 வயதான பெண்ணை பின்தொடர்ந்து தகாத முறையில் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, தண்டனைச் சட்டம் பிரிவு 509ன் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால்,
⛓️ 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை
💰 அபராதம்
அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் சி.எச். லோ,
“என் வாடிக்கையாளர் மாதத்திற்கு RM1,500 மட்டுமே சம்பாதித்து தனது பெற்றோரை பராமரித்து வருகிறார். அவர் தனது தவறை உணர்ந்து மனம் திருந்தியுள்ளார்,” என்று கூறி தண்டனையை குறைக்க கோரினார்.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் தனது செயலுக்காக நீதிமன்றத்திற்கும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, துணை அரசு வழக்கறிஞர் ஷாபிகா அஸ்வா ஃபிக்ரி,
இந்த சம்பவம் மற்றவர்களுக்கு பாடமாக அமைய தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles