34 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

🌧️ கேமரன்மலையில் திடீர் வெள்ளப்பெருக்கு;தொடர் கனமழையால் சாலைகளில் நீர் பெருக்கு!

🔥 Views : 9
👁 Reading Now : 22

தொடர்ச்சியான கனமழையால், கேமரன்மலையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கேமரன்மலை போலீஸ் தலைவர் அஸ்ரி ரம்லி கூறுகையில்,
இன்று பிற்பகல் ஹபு ஹைட்ஸ் பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தெரிவித்தார்.

பிற்பகல் 2 மணியளவில் மழை தொடங்கியதையடுத்து, ரிங்லெட் பிரதான சாலையில் சேற்று நீர் பெருக்கெடுத்து ஓடியது.

மலைப் பகுதிகளில் இருந்து வந்த நீர் திடீரென கீழ்நிலப் பகுதிகளுக்கு சரிந்ததால், பிரதான சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியதாகவும், இதுவே திடீர் வெள்ளப்பெருக்கிற்கு காரணமாக அமைந்ததாகவும் அவர் கூறினார்.

இருப்பினும்,
“நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. மாலை நேரத்திற்குள் நீர் வடிந்துவிட்டது,” என அஸ்ரி ரம்லி தெரிவித்தார்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே தற்காலிக அச்சத்தை ஏற்படுத்தியிருந்தாலும், தற்போது நிலைமை சீராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles