
பினாங்கு மாநில போலீஸ் படையின் முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ அ. தெய்வீகனின் புதல்வி டாக்டர் அபிநயா மற்றும் டாக்டர் ஜெரோய்ட் ஹக்கேயன் அந்தோணி ஆகியோரின் திருமணம் அண்மையில் சிறப்பாக நடைபெற்றதை முன்னிட்டு, அவர்களின் திருமண விருந்துபசரிப்பு ஷா ஆலமில் உள்ள சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையக மண்டபத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் போலீஸ் படைத் துணைத் தலைவர் டான்ஸ்ரீ அயோப் கான் மற்றும் போலீஸ் உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அவர்களுடன், மலேசிய தடகளக் கூட்டமைப்பின் தலைவர் டத்தோ எஸ்.எம். முத்துவும் இந்நிகழ்வில் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியதுடன், டத்தோஸ்ரீ தெய்வீகனுக்கும் தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். மேலும், போலீஸ் அதிகாரிகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எனப் பலர் திரளாகக் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.



