
மதுரை மாவட்ட கலெக்டராக இருந்து வருபவர் அன்பழகன். இவரது மகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
உடனடியாக அவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கலெக்டர் அன்பழகன் பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனையில் அவருக்கு தொற்று எதுவும் இல்லை என்றாலும் கலெக்டர் அன்பழகன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து கலெக்டர் முகாம் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், உதவியாளர்கள், கலெக்டர் இல்லத்தில் பணிபுரியும் பணியாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் கலெக்டர் இல்லம், முகாம் அலுவலகம் ஆகிய இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி மும்முரமாக நடந்தது.
