27.8 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் 28 தொகுதிகளில் கடுமையான போட்டி! அட்லிக்கு நான்கு முனை போட்டி

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று வேட்புமனுத்தாக்கல் சுமூகமாக நடைபெற்றது. 28 சட்டமன்ற தொகுதிகளில் பக்கத்தான் ஹரப்பான், தேசிய முன்னணி மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் கட்சிகள் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. மலாக்கா மாநில பக்கத்தான் ஹரப்பான் தலைவர் அட்லி மீண்டும் புக்கிட் கட்டில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அம்னோ- பாஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர் போட்டியிடுகிறார்கள். இதனிடையே தஞ்சோங் பிடாரா சட்டமன்றத் தொகுதியில் அம்னோ சார்பில் மலாக்கா மாநில தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ராவூப் போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து பெர்சத்து சார்பில் டத்தோ மாஸ் எமியார்த்தி மற்றும் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் ஜைனால் ஹசான் போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles