31.1 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

பயிர்களை அழிக்காதீர்கள் பினாங்கு மாநகர் மன்றத்துக்கு குடியிருப்பாளர்கள் கோரிக்கை

🔥 Views : 5
👁 Reading Now : 34

எங்களின் பயிர்களை அப்புறப்படுத்துவதற்கோ அல்லது அளிப்பதற்கு முன்போ முதலில் களமிறங்கி வந்து எங்களுக்கு முறையான விளக்கத்தை தர வேண்டுமென இங்கு பாயான் லெப்பாஸ் பிந்தாஸ் கெலிச்சாப் பகுதியில் வசிக்கும் 500 குடியிருப்பாளர்கள் பினாங்கு மாநகர் மன்றத்துக்கு கோரிக்கையை முன் வைத்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக 84 குடும்பங்கள் தங்களின் வீடுகளுக்கு அருகிலுள்ள சாலை ஓரத்தில் பயிரிட்டுள்ள மாங்காய்,கொய்யா, சிக்கு,மூலிகை மரங்கள் என சுமார் 50 வகை மரங்களை அங்கிருந்து அகற்ற வேண்டுமெனக் கோரி உள்ளாட்சி அமலாக்க அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். கடந்த 2021 அக்டோபர் 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரு நோட்டீசுகள் வழங்கப்பட்டது. அனுமதி இல்லாமல் வீடுகளுக்கு அருகில் சாலையோரத்தில் இந்த மரங்கள் நடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கும் அந்த நோட்டீசை பினாங்கு மாநகர் மன்றம் மீட்டுக்கொள்ள வேண்டுமெனவும்,எங்களின் பயிர்களையும் அழிக்க வேண்டாமென,தங்களின் அமைதி மறியலில் இவர்கள் கேட்டுக் கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles