
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வேன் மற்றும் லோரி மூலம் பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்படுவதாக மலாக்கா மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. வீடு வீடாக சென்று பிரசாரம் செய்ய அனுமதி இல்லை. மேடை மூலம் பிரசாரம் செய்யவும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் லோரி மற்றும் வேன் மூலம் பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
