33.1 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

நாகேந்திரனுக்கு மரண தண்டனையை ஒத்தி வைக்க சிங்கப்பூர் நீதிமன்றம் அனுமதி

🔥 Views : 11
👁 Reading Now : 26

போதைப்பொருள் கடத்தல் குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மலேசிய பிரஜை நாகேந்திரனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை ஒத்தி வைக்க சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. போதைப்பொருள் விநியோகித்தக் குற்றத்திற்காக ஒரு மலேசியரான அவர் தூக்கிலிடும் வரை தீர்ப்பு விதிக்கப்பட்டது. வரும் நவம்பர் 10 ஆம் தேதி அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவிருந்தது. ஆனால் இப்போது அந்த தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாகேந்திரன் தற்போது சாங்கி சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார். ஒரு மாற்றுத் திறனாளியைச் சட்டப்படித் தூக்கிலிட முடியாது என்று தற்போது வழக்கறிஞர்கள் வாதிட்டு வருகிறார்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles