28.4 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

நாகேந்திரனின் மனு நிராகரிப்பு! அவரை காப்பாற்றும் முயற்சியில் மனித உரிமை இயக்கங்கள் போராட்டம்

போதைப்­பொ­ருள் கடத்­திய குற்­றத்­துக்­காக மலே­சி­ய­ரான 33 வயது நாகேந்­தி­ரன் கே. தர்­ம­லிங்­கத்­துக்கு விதிக்­கப்­பட்ட மரண தண்­டனை நாளை நிறை­வேற்­றப்­படுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்விகளுக்கு மத்தியில் அவரை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற மனித உரிமை இயக்கங்கள் போராடி வருகின்றன. தற்போது நாகேந்­தி­ர­னின் கருணை மனு நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. மரண தண்­ட­னையை ரத்து செய்ய மனு­தாக்­கல் செய்த நாகேந்­தி­ரன், தமக்கு அறி­வாற்­றல் குன்­றியநிலை இருப்­ப­தாக அதில் குறிப்­பிட்­டி­ருந்­தார். 33 வயது என்­ற­போ­தி­லும் தமக்கு 18 வயது இளை­ய­ரின் அறி­வாற்­றல் மட்­டுமே இருப்­ப­தாக அவர் தெரி­வித்­தார். அறி­வாற்­றல் குன்­றி­யோரை சிங்­கப்­பூர் சிறைத் துறை தூக்­கி­லி­டு­வ­தில்லை என்று தமது மனு­வில் அவர் குறிப்­பிட்­டார். இதைச் சிறைத் துறை மறுத்து விட்­டது. நாகேந்­தி­ர­னுக்கு 18 வயது இளை­ய­ரின் அறி­வாற்­றல் இருப்­ப­தற்கு நம்­ப­க­மான ஆதா­ரம் ஏதும் இல்லை என்று நீதி­பதி சீ கீ ஓன் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே நாகேந்திரனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற போராடி வருகிறோம் என்று மனித உரிமை கழகங்கள் அறிவித்துள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles