
ஐம்பத்து நான்கு வயதுடைய நாடாளுமன்றப் பணியாளர் ஒருவர் கோவிட் 19 தாக்கத்தினால் உயிரிழந்ததை கோலாலம்பூர், புத்ராஜெயா சுகாதார அலுவலகங்கள் உறுதிச் செய்ததாக இயக்குனர், டத்தோ டாக்டர் பரம் ஜிட் சிங் தெரிவித்தார். கோவிட் தொற்றுக் கண்டிருப்பது இம்மாதத் தொடக்கத்தில் உறுதிச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேற்று அவர் உயிரிழந்தார். இவருக்குத் தொடக்கத்தில் கடந்த 3ஆம் தேதி காய்ச்சலும் இருமலும் இருந்ததால் 8ஆம் தேதி கோவிட் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது என்றார் அவர்
