26.4 C
Kuala Lumpur
Friday, July 17, 2026

Vetri

காய்கறி பொருட்கள் விலை உயர்வால் மக்கள் பெரும் பாதிப்பு!

🔥 Views : 13
👁 Reading Now : 33

நாட்டில் தற்போது கோழி, முட்டை, காய்கறிகள் போன்ற உணவு வகைகளின் விலை ஏற்றத்தால் மக்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி இருக்கிறார்கள் என்று பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி சிவகுமார் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் பக்கத்தான் ஹரப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று உள்நாட்டு வணிகம் , பயனட்டாளர் விவகார துணையமைச்சரிடம் பொருட்களின் விலையேற்றம் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணும் படி குரல் எழுப்பினர் என்று அவர் சொன்னார். ரொட்டி , மாவு, சீனி, அரிசி, முட்டை காய்கறி, கோழி, இறைச்சி உட்பட அத்திவாசிய உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த இன்றைய அரசாங்கம் தவறிவிட்டது என்று அவர் தெரிவித்தார். ஆகையால், சம்பந்தப்பட்ட அமைச்சர், துணையாமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles