
மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணித் தோல்வியுற்றதற்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமைக் குறை சொல்வதை சக கட்சித் தலைவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ரிஃபோர்மாசி கட்சியின் செயலாளர், அப்துல் ரசாக் இஸ்மாயில் கேட்டுக் கொண்டுள்ளார். மலாக்கா மாநிலத் தேர்தல் அடைவு நிலையைக் காரணம் காட்டி அன்வாரைத் தலைவர் பதவியிலிருந்து விலகும்படி பக்கத்தான் உறுப்புக் கட்சித் தலைவர்கள் நெருக்குதல் கொடுப்பது தொடர்பில் நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை மலாக்கா தேர்தலில் தோல்வி அடைந்ததற்கான உண்மையானக் காரணத்தை பக்கத்தான் தலைவர்கள் கண்டுபிடிப்பதுதான் நியாயம் என்று நாங்கள் கருதுகிறோம் என்றார்.
